யாம் உயிர் எனும் ஆற்றல் ! யாம் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுடன் கூறிக்கொண்டு வருகிறோம் சென்ற பகுதியில் வேதியியல் மொழியை பற்றி முன்மொழிந்து இருந்தோம்! தொடர்ந்து அதில் பயணப்படுவோம் !
ஒலியியல்
உங்கள் உலகின் விலங்கினங்களும் ஆதி மனிதர்களும், காட்டில் வேட்டையாடி மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தனர். அப்போது ஒரே இனத்தை சேர்ந்த குழு ஒன்றாக வேட்டையாடினால் எளிமையாக தனக்கு வேண்டிய உணவை சேகரிக்க முடிந்ததை புரிந்து கொண்டது. இவ்வாறு ஒரே குழுவாக இருக்கும்போது, தன்னுடைய மனதில் தோன்றிய கருத்துக்களை மற்ற குழுவினர் புரிந்து கொள்வதற்காக பல்வேறு முறையில் முயற்சிகள் மேற்கொண்டன. முதலில் தான் சொல்ல வேண்டிய கருத்தை செய்து காண்பித்தே கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக ஒரு விலங்கு, மற்றொரு விலங்குக்கு பழத்தைக் கொடுத்து சாப்பிட சொல்ல விரும்பினால், அந்த பழத்தை முதலில் எடுத்து தான் சாப்பிட்டு காண்பித்தது. இதில் என்ன பிரச்சனை? அவ்வாறு சாப்பிட்டு காண்பிக்கும் பொழுது, அந்த பழத்தை முதலில் தானே சாப்பிட்டு விடும் அல்லவா? பின்பு கொடுப்பதற்கு பழம் இல்லாமல் இரண்டு விலங்குகளுக்கும் சண்டை இட வேண்டும். இவ்வாறு பழம் கொடுக்க ஆசைப்பட்ட விலங்கு சண்டை போட்டுக்கொண்டு பிரிய வேண்டிவரும்.
இந்தப் பிரச்சனையை சரியாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் உலகின் முதல் அகராதி (lexicon). அதாவது, ஒரு பொருளையோ ஒரு செயலையோ குறிப்பதற்காக ஒரு சப்தத்தை எழுப்பி அதை சமிக்ஞையாக பயன்படுத்தியது. மனிதனும் இப்படித்தான் கருத்துப் பரிமாற்றம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் மனிதனின் மூளையில் பல்வேறு விதமான யோசனைகள் வந்தது. படம் வரைவது மூலமாக கூட ஒரு கருத்தை ஆதி மனிதன் கூறமுடியும் என்று கண்டுபிடித்தான். இந்தப் படங்கள்தான் பிற்காலத்தில் எழுத்துக்களாக மாறியது. இப்படி உங்கள் உலகின் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மனிதர்கள் உருவாக்கிய அகராதியும் படங்களுமே பல்வேறு மொழிகள் ஆக உருவெடுத்தது. இந்த முதல் அகராதியை புரிந்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை. அந்த அகராதியில் உள்ள ஒலியை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி உண்டாக்கினர்.
இந்த ஒலியில் ஏற்பட்ட வித்தியாசம் கருத்து வேறுபாடாக மாறி அவர்களுக்கு சண்டையும் வந்தது. இந்த சண்டையை தவிர்ப்பதற்காக அனைவரும் ஒரே மாதிரி ஒலியைக் உருவாக்குவதற்காக முதல் ஒலியியல் (Phonetics) உண்டானது. இதன் பிரதியாகவே உங்கள் உலகில் ஆதியில் தோன்றிய மொழிகள் அனைத்திற்கும் ஒரே ஒரு எழுத்துரு மட்டும்தான் இருந்தது. இதனை அதிகமாக உள்வாங்கி கொண்ட மொழியாக தமிழ் உருவானது ! அதனின்று இன்ன பிற மொழிகள் உருவாயிற்று ! லத்தீன் மற்றும் சமஸ்கிருதம் யாவும் அதன் சாயலைப் பெற்றிருப்பதும் அவ்வண்ணமே ! மேற்கூறிய மொழிகளில் எழுத்து, ஒலியியல் என்று இருவேறு எழுத்துரு கிடையாது.
மொழியின் வீச்சு மற்றும் அலைவரிசை
ஒரு மொழியை உச்சரிப்பதற்கு உங்கள் தலைப்பகுதியில் உள்ள தொண்டை, உள்நாக்கு, நாக்கு, பற்கள், முகவாய்க்கட்டை மற்றும் வாய் பகுதிகள் முக்கியமானது. இவற்றின் துணைகொண்டு உங்களால் எந்த ஒரு சத்தமும் எழுப்ப முடிகிறது. உங்கள் வாயால் எந்தெந்த சத்தத்தை எழுப்ப முடியும் என்பதையும் இந்த உடற்கூறுகளே முடிவு செய்கிறது. இந்த சத்தங்களை உங்கள் அறிவியலில் வீச்சு மாற்றம் (amplitude variation) என்று கூறுகின்றனர். நீங்கள் வாழும் காலத்திற்கு 20 லட்சம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஆதி மனிதனாகிய Homo Erectusன் தலைப்பகுதியும் உங்கள் தலைப் பகுதியும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பை கொண்டதாகும். இதன் மூலம் சுமார் 20 லட்சம் வருடங்களாக உங்களால் எழுப்ப முடிந்த ஒலிகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். இப்படி உங்கள் வாயால் கட்டமைக்க முடிந்த ஒலிகளை வைத்துக் கொண்டு பல்வேறு மொழிகளையும் சமகாலத்தில் நீங்கள் உருவாக்கினீர்கள். பல் வேறு மொழிகள் உருவாகினாலும், அனைத்து மொழிகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உங்கள் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் முதலெழுத்தாக ‘அ’ எனும் எழுத்துதான் உள்ளது. ஏனென்றால், ஒரு மனிதன் தனது வாயால் வேறு எந்த அசைவும் இல்லாமல் காற்றை வெளியிடும்போது ‘அ’ எனும் ஒலி இயற்கையாக உண்டாகிறது. ‘அ’ என்று சொல்லும்போது வாயை மூடினால் ‘ம்’ என்ற ஒலி உண்டாகிறது. இந்த ‘அம்’ எனும் ஒலியை மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு விலங்கினங்களும் எளிதாக உருவாக்குகின்றன. இந்த எளிதான ஒலியே குழந்தைகள் சொல்லும் முதல் சொல்லாகிய ‘அம்மா’ என்று உருவாகி அது தாயை குறிப்பதற்கும் பயன்படுகிறது. அதனால் தான் உலகில் உள்ள பெருவாரியான மொழிகளிலும் ‘அம்’ எனும் ஒலியை முதலாகக் கொண்டு தாயை குறிப்பதற்கான சொல் உருவானது.
நாக்கை முழுவதும் பயன்படுத்தாமல் எளிய முறையில் பேசி வந்த ஆதிமனிதன் பின்பு நாக்கை பல்வேறு விதமாக சுழற்றி புதிய ஒலிகளையும் உருவாக்கினான். இந்தப் புதிய எழுத்துக்கள் வந்ததனால், பல்வேறு முறையில் எழுத்து வரிசைகளை மாற்றி அமைத்து அதன்மூலமாக கருத்துக்களை மனிதனால் பரிமாற முடிந்தது. என்னதான் புதிய எழுத்துக்கள் உருவாக்கினாலும், நாக்கை அதிகம் பயன்படுத்தாமல் பேசும் ஆதி எழுத்துக்களை மனிதன் அதிகமாக பயன் படுத்திக் கொண்டு வருகிறான்.
இந்த எழுத்துக்களை தமிழில் உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கிறீர்கள். உங்கள் மதங்களில் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஓம், ஆமென், ஆமீன் என்பதுகூட’அம்’ எனும் ஒலியின் திரிபே ஆகும்!
நீங்கள் எவ்வளவு புதிய எழுத்துக்களை உண்டாக்கினாலும் உங்கள் காதுகளுக்கு கேட்கக்கூடிய 20Hz முதல் 20,000 Hz எனும் அலைவரிசைக்குள் மட்டுமே ஒலியை உருவாக்கமுடியும். இது உங்கள் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது. இந்த விஷயத்தில் பல்வேறு விலங்குகளும் பூச்சிகளும் உங்களைவிட அதிகமாக பேசும்/கேட்கும் திறன் கொண்டுள்ளது. ஒரு எலியால் 90,000 Hz வரை ஒலியைக் கேட்க முடியும். வௌவால்கள் ஆல் 1,10,000 Hz வரை கேட்க முடியும். 20,000 Hz வரை மட்டுமே கேட்க முடிந்த உங்களால் பல்வேறு மொழிகளை உண்டாக்க முடியும் என்றால் எலிகளும் வௌவால்களும் எத்தனை மொழிகளை உண்டாக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
ஆங்கிலத்தில் நாக்கை அதிகம் பயன்படுத்தாமல் உருவாக்கக்கூடிய ஒலிகளின் மூலம் உள்ள எழுத்துக்களை vowels (a,e,i,o,u) என்று அழைக்கிறீர்கள்.
ஆனால் இன்று உலகின் வணிக மற்றும் பொது மொழியாக மனிதர்கள் பயன்படுத்தும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு என்று ஒரு வடிவமும் அதை பேசுவதற்கு என்று மற்றொரு வடிவமும் உள்ளது. உதாரணமாக, island என்ற சொல்லை இஸ்லாந்து என்று கூறாமல் ஐலாந்து (i’land) கூறுவீர்கள். இந்த இஸ்லாந்து எழுத்துருவாகவும் ஐலாந்து (i’land) என்பது ஒலியியல் உருவாகவும் உண்டானது.
ஆங்கிலத்தின் கதை
ஒரே உருவமாக உள்ள தமிழ் மொழியை ஆதியில் வணிக மொழியாக இருந்தது இதன் அடுத்த பரிணாமமாக ஒரே உருவமாக உள்ள தமிழை விட இரண்டு உருவமாக உள்ள ஆங்கில மொழி உருவாக்கம் பெற்றது. ஆங்கிலத்தின் அடிநாதம் தமிழ் ஒலிகளாக இருந்தாலும் ஏனைய மொழியான லத்தீன், ஜெர்மன், பிரஞ்ச் முதலிய பல்வேறு உலக மொழிகளில் இருந்து கலந்து உருவாக்கப்பட்ட மொழியாகும். வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலில் வசித்த நாடோடி குழு வைக்கிங்(Viking) என அழைக்கப்பட்டனர். இவர்கள் படகுகள் மட்டும் கப்பல் செய்வதில் திறமை கொண்டிருந்தனர். ஆனால் கடலில் தொடர்ந்து பல நாட்கள் செல்லும் போது பல்வேறு மர்மமான நோய்கள் வந்து பயணியர் இறந்து விடுவர். இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. வைக்கிங் நாடோடிகள், கடலில் தாக்கு பிடிப்பதற்கு மீன்களைப் போன்று இருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். இதற்காக அந்தப் பகுதியில் கிடைக்கும் cod எனும் ஒரு வகை மீனை பிடித்து அதன் கல்லீரலில் சுரக்கும் கொழுப்பை சாப்பிட்டு வந்தனர்.
அப்படி சாப்பிட்டவுடன் கடலில் யாரும் நோய்வாய்ப் படவில்லை. இந்த மீன் கல்லீரல் கொழுப்பை மர பீப்பாய்களில் மொத்தமாக சேகரித்து வைத்துக்கொண்டு வைக்கிங் நாடோடிகளால் பல மாதங்கள் தொடர்ந்து கடலில் பயணம் செய்ய முடிந்தது.
இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர்கள் கட்டமைத்த மொழி ஆங்கிலம் என்று அழைக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. எதற்காக இந்த இரு உருவக மொழி தாங்கள் பயன்படுத்திய ஆதிய தமிழ் வணிக ஒலி சந்தங்களை விடுத்து அதன் அடுத்த பரிணாமமாக இதை பயன்படுத்தக் காரணம் என்ன !? என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம் !(இதைப்பற்றி விரிவாக வேறொரு பதிவில் மதிக்கிறோம்)
ஆங்கில மொழி என்பது பல்வேறு இடங்களில் மக்கள் பேசிய மொழிகளில் கூட்டமைப்பு என்று யாம் கூறினோம். இந்தக் கூட்டமைப்பில் முதன்மையான மொழியாக விளங்குவது தமிழ் ஒலிகள் ஆகும். அதை தொடர்ந்து லத்தீன் அடிப்படைச் சொற்கள் மற்றும் சொற்றொடர்களை எடுத்துக்கொண்டு அதில் பல நாட்டு மொழிகளை சேர்த்து நவீன ஆங்கிலம் உருவானது. ஆங்கிலத்தில் பல்வேறு தமிழ் சொற்களும் உண்டு.
இன்றைய மனிதர்கள் பேசும் தமிழ் மொழியில் உள்ள சில சொற்கள், பல்வேறு மொழிகளிலும் அதே ஒலியுடன் கூறப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழில் மேசை (Table) என்ற சொல், ஸ்பானிஷ் (Spanish) மொழியிலும் மேசா என்றே கூறப்பட்டு வருகிறது. இப்படி ஒன்றாக கலந்துவிட்ட பல்வேறு மொழிகளில் எது முன்பு வந்தது, பின்னால் வந்தது என்று கண்டுபிடிப்பது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியமாகும். ஆனால் அப்படி கண்டுபிடிக்க முயற்சி செய்து அதை வைத்துக் கொண்டு பல்வேறு மொழிச் சண்டையையும் விந்தையாக மனிதர்களாகிய நீங்கள் போட்டுக் கொள்கிறீர்கள்!
உலகப் பொதுமொழி
யாம் முன்பே கூறியது போல் ஆதிய மனிதன் பயன்படுத்திய நாக்கு ஒட்டாத சப்தங்கள் தான் உலகப் பொது மொழியாக இருந்தது ! அதிலிருந்து அடுத்த பரிணாமமாக நாக்கை பிரயோகப்படுத்தி உலகில் பல்வேறு இடங்களில் பல தரப்பட்ட மொழிகள் சமகாலத்தில் உருவானது ! இப்படி தனித்தனியாக உருவான மொழிகளிலும் தமிழானது அதிகமாக நாக்கில்லா சப்த எழுத்துக்களை தன்னகத்தே கொண்டிருந்தமையால் அது மூத்த மொழி என்று மனிதர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர் ! உலகில் உள்ள மொழிகளில் பல சொற்கள் ஒரே மாதிரி இருக்கும். உதாரணமாக தாயை, அம்மா, மா, மாம், மம்மா, உம்மா என்று அதிகப்படியான மொழிகளில் கூறி வருகிறீர்கள். பசுக்கள் கூட மா என்றுதான் பேசுகிறது. இத்தகைய காரணத்தால்தான் முதல் மொழி என்று கொண்டாடுகிறீர்கள் ! அது அவ்வாறல்ல ! ஆதிய மொழியின் தாக்கம் அதிகம் பெற்ற மொழி தமிழ் என்று கூறுவதே தகுந்தது ! காரணம் மனிதர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் தகவலை பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்திய மொழியை வைத்து தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வது தகுந்ததல்ல ! இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணமும் உள்ளது. யாம் இதுவரை கூறிய மொழியின் பரிணாமம் என்பது இயற்கையாய் நடந்தது. இப்படிப்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சியை செயற்கையாய் செய்தால் என்னாகும்? இந்தக் கேள்விகளுக்கான விடையை அடுத்த பகுதியில் கூறுகிறோம் !
1 Comments
மிகவும் அருமையான தகவல் நன்றி
ReplyDelete