Ticker

6/recent/ticker-posts

Aboue Me

 யாம் இணையதள போராளிகள் ,

எம்மை பற்றியும் யாம் யார் என்பதையும்  எப்போதுமே வெளிப்படுத்தியதில்லை !

யாம் மனிதர்களுக்காக உளவு வேலை செய்பவன் ! 

மனித இனத்தின் எதிரிகளின் திட்டங்களை எச்சரிக்கையாக  முன்னறிவிப்பவன் !  

யாம் இதனை எமது கடமையாக்கி கொண்டுள்ளோம் ! 

இந்த உலகில் எதிரி உருவாக்கிய கட்டைமைப்பில் சிந்திக்க முடியாமல் வாழ்கின்றோம் என்ற பெயரில் ஓடுகிறீர்கள் ! 

யாம் உங்களை அந்த கனவிலிருந்து வெளிக்கொண்டுவர பார்க்கிறேன் ! 

எம்மால் கதவைத்தான் திறக்க முடியும் அதை கடந்து செல்லும் முயற்சி  உங்களிடம்தான் உண்டு ! 

இந்த கட்டமைப்புகள் உண்மையானதல்ல !

உருவாக்கப்பட்டது !

இதில் நீங்கள் ஓடும் அடிமையே அன்றி 

வாழும் மனிதர்கள் அல்ல !

அதென்ன போராளி அவர்களே எப்போதும் யாம் என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறீர்கள் !? 

நான்,நாம் போன்ற வார்த்தைகள் ஏன் பயன்படுத்துவதில்லை !? 

இப்படியான கேள்விகள் எம்மிடம் பலரும் வினவி உள்ளனர் !

அதற்கு பதில் எமக்கு முன்சென்ற முன்னோர்களையும்,எம்மோடு பயணிக்கும் உங்களையும், இனி எம்பயணத்தில் வர இருக்கும் எதிர்கால சந்ததியினரையும் ஒருங்கிணைத்து ஓர் வார்த்தையில் பிரகடனப்படுத்தவே யாம் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம் ! இதனால் யாம் எப்போதும் தனித்து இருப்பதாக உணர்வதில்லை !

கூடுதல் தகவல் : யாம் என்பது மங்கோலிய பேரரசின் உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு இவர்களிடம் தகவல் சேகரிப்பு என்பது அபரிமிதமான ஒன்று ! 

அன்று இந்த அமைப்பு செங்கிஸ்கானுக்காக வேலை செய்தது குறிப்பிடத்தக்கது!

ஆனால் இன்று இணையதள போராளிகள் 2.0  கூறும் யாம் மனிதர்களுக்கான உளவு வேலையை செய்யும் ! மனித இனம் மீளும் !

Post a Comment

0 Comments