மனிதர்களுக்கு வணக்கம் ! யாம் மதங்களற்றவன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் ,அதோடு யாம் உலகில் உருவாக்கம்பெற்ற மதங்களை ஆய்வு செய்யும் சிறு மாணவனும் கூட,அத்தகைய எமது ஆய்வுகளில் புராணங்களும் வேதங்களும் செவிவழிகதைகளும் உண்டு !
யாம் அறிவியலோடு ஆய்வு செய்யும் வரலாற்று தொன்மங்களையும் அதே வேளையில் அதோடு பொறுத்தி பார்ப்பதும் உண்டு !
சரி விஷயத்திற்கு வருவோம் ! அதர்வண வேதங்களை யாம் பெரும்பாலும் புரட்டியுது உண்டு ! அதில் சக்கர முறைகள் பற்றியும் யாம் படித்தறிந்ததுண்டு !
இத்தகைய மந்திரங்கள் இஸ்லாமிய மதத்திலும் மூஸா-ன் காலத்திலும் உண்டு ! கிறித்துவம் சொல்லவே வேண்டாம் பல உதாரணங்களை நீங்களே பார்த்திருக்க கூடும் ! ஆனால் யாம் இங்கு கூற விளைய முற்படுவது சில தொடர்புகள் பற்றிதான்!
ஷம்பல்லா இந்த பெயரை கவனமாக பார்க்கவும் ! நீங்கள் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தை பார்த்திருந்தால் புரியும் இந்த சொல் அந்த படத்தில் சாதாரணமாக தோன்றியது போல் தோற்றமளிக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல !
படத்தில் கமர்-தாஜில் உள்ள வைஃபை கடவுச்சொல் 'ஷாம்பல்லா' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ! இது ஒரு தற்செயலான வார்த்தையாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் அது உண்மையில் மிகவும் ஆழமான பொருளைக் கொண்டுள்ளது மற்றும் இந்து புராணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்து மத நூல்களின் அடிப்படையில் கல்கி தான் இறுதி அவதாரம் ! மேலும், கல்கியின் பிறப்பு சத்யயுகம் என்ற புதிய யுகத்தின் பிறப்பிற்கு வழிவகுக்கும்.
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இங்கு விஷ்ணுவாக இருப்பது எதிரிகளின் முன்னோர் !( குறிப்பு:-மனிதர்களின் முன்னோர் அல்ல ,மனித இனத்தின் மூத்தோன் மாயவன் எனும் மாயோன் !
எதிரிகள் மனிதர்களிடையே அவர்களின் முன்னோரின் பல கதைகளையும் உருவகத்தையும் தான் இன்று திணித்துள்ளனர் !)
ஷம்பல்லா என்பது கல்கியின் பிறப்பிடம் !கமர்-தாஜின் மற்றொரு பெயராகத்தான் ஷம்பல்லா வை குறிப்பிடுகிறார்கள் ! கமர்-தாஜ் ஒரு புதிய அவதாரத்தை பெற்றெடுக்கிறது அதுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். !
அதாவது மாயபிரபஞ்சத்திற்கு ஒரு புதிய நம்பிக்கை கதிர் ! (எதிரிகளுக்கு)
சரி அதென்ன மாய பிரபஞ்சம் தற்போது வர இருக்கும் மெட்டா வேர்ல்ட் பற்றி பல முறை கூறியுள்ளோம் ! அதோடு தொடர்பு படுத்தி பாருங்கள் ! எதிர்காலம் உங்கள் கண் முன் தெரியும் ! அடுத்தது
ஐ ஆஃப் அகமோட்டோவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு எல்லையற்ற நேர சுழற்சி பற்றி படத்தில் வரும் ! இதேபோல், இந்துக்கள் மற்றும் பௌத்தர்களும் காலசக்ரா அல்லது " காலச் சக்கரம்" இருப்பதை நம்புகிறார்கள்.! காலசக்ரா காலத்தை பின்னோக்கி முன்னும் பின்னும் திருப்பி பல்வேறு வழிகளில் கையாளும் ஆற்றல் பெற்றிருந்தது. படத்தில் அதை தொடர்புபடுத்தும் காட்சிகள் பல உள்ளது !
படத்தில் விஷாந்தி புத்தகம் என்ற புத்தகத்தை காட்டுவார்கள் ! அது இப்பூவுலகில் உள்ள எல்லா மந்திர அறிவும் உள்ள ஒரு தொகுப்பு ஆகும். இந்த மந்திரங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளது.
இதேபோல் இந்து மதங்களில், அதர்வணவேதம் உள்ளது இதை ஒத்த ஒரே மாதிரியான செயல்பாடுகளைக் கொண்டிருந்தது.அதர்வணவேதம் என்பது நன்மை மற்றும் தீமை இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் மந்திரங்களைக் கையாளும் ஒரு வேதமாகும்.
இப்படியான ஒற்றுமை தற்செயலாக வடிவமைக்க வாய்ப்பில்லை ! எதிரியை எப்படி வெளிப்படுத்த போகிறார்கள் என்பதை படம் போட்டு காட்டியுள்ளார்கள் ! என்பதே எமது கூற்று !
அன்றும் தொழில்நுட்பம் இன்றும் தொழில்நுட்பம் !
அன்று மனித முன்னோர்களிடம்
இன்று எதிரிகளிடம்
அதுதான் வேறுபாடு !
தொடர்ந்து ஆய்வு செய்வோம் !
1 Comments
வணக்கம் சார்
ReplyDelete