அதென்ன மர்மம் !
1.வலதுபக்க மார்பில் கடிக்கப்பட்டதுபோல காயம் உள்ளது. கீழே விழுவதால் ஏற்பட்ட காயம் அல்ல
2.மூன்று மாடியிலிருந்து வீழ்ந்திருந்தால் அதற்குரிய ரத்தக் கரை (காட்டப்படும் அந்த இடத்தில்) ஏன் இல்லை?
3. படிக்கட்டில் ஒரு ரத்தகரை இருந்ததையும, அதைப் படம் எடுத்துள்ளதையும்
அது யாருடைய இரத்தம் என்பதற்கான ஆய்வு எங்கே !?
4. அரசும் விசாரணையும் இப்போது இந்த சம்பவத்திற்கு பின் ஏற்பட்ட வன்முறைகள் மீதே கவனம் குவிக்கின்றன.
5. பள்ளிச் சொந்தக்காரரின் இரண்டுமகன்கள் 13ந்தேதி முதல் காணவில்லையே எங்கே அவர்கள் !?
6. இரவு 8 மணிவரை அம்மாவிடம் அந்தப் பெண் பேசியுள்ளாள். எது நடந்திருந்தாலும் அதற்குப் பின்பே நடந்திருக்க வேண்டும்.
7. என்னுடையா டாக்டர் போஸ்ட் மார்ட்டத்தின்போது இருக்க வேண்டும் எனக் கோர பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிமை உள்ளது. எப்படியேனும் உண்மையைக் கண்டுபிடிப்பதே (காவல்துறையின்) நோக்கமாக இருக்க வேண்டும்.
8. மூன்றாவது போஸ்ட்மார்டம் எல்லாம் மிகக் காலதாமதம் என்பதால் பெரிய அளவில் பயன் அளிக்க இயலாது (முதல் இரண்டு போஸ்ட்மார்டம்களில் ஆதாரங்களுக்காகப் பல முக்கிய தடையங்கள் நீக்கப்படுவதால்). முதல் இரண்டு போஸ்ட்மார்டம் அறிக்கைகளை வேண்டுமானால் மூத்த மருத்துவர்களுக்கு அனுப்பிக் கருத்துக் கோரலாம்.
9. தற்கொலை கிடையாது. கொலைதான் எனக் கோர நீயாயம் உண்டு.
10. முதல் போஸ்ட்மார்டம் செய்தவர்களில் ஒருவர் மனோதத்வ மருத்துவர்: மற்ரவர் ஒரு டியூட்டர். (துறை சார் மூத்த மருத்துவர்கள் இல்லை).
11. சுடிதார் ரத்தக்காயம் சோதனைக்கு அனுப்பப்படவில்லை.
12. உடைகள் கைப்பற்றப்பட்டது 12 இரவு, 36மணி நேர தாமதம்.
13. இரண்டு போஸ்ட்மார்டம்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது ரிப்போர்ட் இன்னும் வரவில்லை.
14. Suicide Note எனச் சொல்லப்படுவதில் கையொப்பாம் இல்லை.
15. இரு ஆசிரியர்கள் கைது. பள்ளி நிர்வாகமே அப்படி இருவரை (பொறுப்பற்றவராக இருந்துள்ளார் எனும் ரீதியில்) கைது செய்வதற்குத் தந்திருக்கலாம்.
16. வலதுபக்க விலா எலும்பில் காயம் என்றால் அது எப்படி ஏற்பட்டது. இரும்புக்கம்பி பின்னாலிருந்து தாக்கினால்தான் அப்படி ஏற்படும்.
17. போஸ்ட் மார்ட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரும் இருக்கவேண்டும் எனக் கேட்க உரிமை உண்டு. ஆனால் மறுத்துள்ளது !
18.திமுகவின் அரசியல் ஊடகமான தினகரன் ,தந்தி நிறுவனத்தின் மாலைமுரசு மற்றும் தினதந்தி வலைதளத்தில்,மாணவிக்கு "போதை பொருள்" கொடுக்கப்பட்டதாகவும் FIR இல் சேர்த்க்கப்பட்டதாகவும் பிறகு அது உடனே நீக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியிட்டு அதை மாற்ளியுள்ளனர்.இது போட்டோஷாப் என்று தற்போது இந்த ஊடகங்கள் மறுத்துள்ளது.
19.இதுபோன்ற செய்தியை இந்த ஊடகங்கள் வெளியிட்டு பிறகு அதை மாற்றியது உண்மையா என்பதை சைபர் கிரைம் ஆய்வு செய்ய வேண்டும்.
20.FIR ஆரில் போதை பொருள் கொடுத்தது பற்றி சட்ட பிரிவை முதலில் சேர்த்து விட்டு பிறகு அதை "யார்" சொல்லி நீக்கினார்கள்... ?
21.பள்ளி தரப்பில் வெளியான மாணவியின் CCTV காட்சிகளில் மாணவி "தள்ளாடி" சோர்ந்து போய் அமரும் காட்சிகள் தெள்ளத் தெளிவாக பதிவாகி அதை உலகமே பார்த்துள்ளது.
22.பள்ளியில் 12 ஆம் தேதி நள்ளிரவில் பார்ட்டி நடந்தது பற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் 13 ஆம் தேதி அதிகாலை 5.30 க்கு மாணவியின் உடலை "வாட்சுமேன்" பார்த்ததாக ஏற்கனவே செய்திகள் பதிவாகியுள்ளது.
23.மருத்துவமனைக்கு மாணவியை பள்ளி ஆம்னி வேனில் கொண்டு வந்து சேர்த்த போதே உயிரற்ற உடலாகத்தான் வந்தது என்பதை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.
24.அப்படியானால் உயிரற்ற உடலை கண்டதும் பள்ளி நிர்வாகம் ஏன் காவல்துறைக்கு தகவல் அளிக்கவில்லை?
25.மாணவியின் முதல் உடற்கூராய்வில் மாணவியின் உடலில் இருந்த காயங்கள் அவள் உயிர் போவதற்கு முன் இருந்துள்ளது என்று பதிவாகியுள்ளது.
26.அப்படியானால் மாணவியின் உயிர் போவதற்கு முன் ஏற்பட்ட காயங்களுக்கான காரணங்கள் எவை என்பதை விளக்கும் கடமை வந்துவிடுகிறது.
27.மாணவியின் வயிற்றில் செறிமானமாகாத பச்சை நிற உணவு இருந்ததாக உடற்கூராய்வு உறுதி படுத்துகிறது.
28.ஒரு மனிதன் எடுத்துக்கொள்ளும் உணவு ஜீரணமாக நான்கு மணிநேரம் ஆகும் என்று கணக்கில் எடுத்து கொண்டால் மாணவியின் மரணம் நிகழ்ந்த நேரத்தை கண்டுபிடிக்க முடியும்.
29.அப்படியானால் மாணவி 12 ஆம் தேதி இரவு " 8" மணிக்கு உணவு எடுத்து கொண்டால் மரணம் அன்று இரவு 10 முதல் 12 மணிக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று முதல்
உடற்கூராய்வு அறிக்கை தெளிவு படுத்துகிறது.
30.12 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் பார்ட்டி நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கே போதை பொருள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய வேண்டும் !
31.அப்படியானால் மாணவிக்கு யாராவது ஏதோ ஒரு பொருளில் போதைப் பொருளை அந்த மாணவிக்கு தெரியாத வண்ணம் கொடுத்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
32.அதற்கு ஏற்றார் போல முதலில் எழுதப்பட்ட FIR ல் போதை பொருள் பயன்படுத்திய பிரிவை சேர்த்து பிறகு "யாரோ" கொடுத்த அழுத்தம் காரணமாக அவை மாற்றப்பட்டுள்ளது என்று உறுதி செய்து கொள்ள முடிகிறது.
33.மாணவியின் வயிற்றில் செறிக்கப்படாத "பச்சை நிற உணவு இருந்தது என்பதை உடற்கூராய்வு உறுதி செய்யும் நிலையில், அது "வெற்றிலை" போன்ற "பச்சை நிற" பொருளாக ஏன் இருக்கக் கூடாது !?
34.வெற்றிலையை "பீடாவாக" ஏதேனும் ஒரு போதை பொருள் சேர்த்து யாரும் ஏன் கொடுத்திருக்க கூடாது
35.12 ஆம் தேதி இரவில் நடந்த பார்ட்டியில் மாணவிக்கு போதை தரும் ஏதோ ஒரு பொருள் கொடுக்கப்பட்டது உண்மை தான் என்பதை மாணவி தள்ளாடி சோர்ந்து போய் அமரும் CCTV காட்சிகள் உறுதிபடுத்துகிறது.
36.பள்ளியின் சொந்தக்காரரின் மகன்கள் மாணவி மரணம் 13 ஆம் தேதி வெளியே தெரிந்த பிறகு அவசர அவசரமாக வெளிநாடு தப்பியதாக செய்திகள் வந்த நிலையில் அவர்களை பாதுகாப்பாக தப்ப விட்டது யார்?
37.மாணவிக்கு போதை பொருளை மறைத்து அவள் அறியாத வண்ணம் கொடுத்து சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிறகு அது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மாணவியை கொலை செய்து பின்னர் அதை தற்கொலையாக சித்தரித்த வண்ணமே காட்சிகள் அரங்கேறியுள்ளது.
28."காய்ந்த வெற்றிலை",
ஐடி கார்டு மற்றும் ஆணுறைகள் ஒரு கோப்பில் இருந்து வெளியே காட்டப்படும் காட்சிகள் வெளியானதை உலகமே பார்த்தது.
மாணவி எழுதியதாக வெளியான "தற்கொலை கடிதம்" போலி என்பதும் அந்த மாணவியின் கையெழுத்து மூலமாக உறுதியாகத் தெரிகிறது.
அப்படியானால் போலி தற்கொலை கடிதத்தை எழுதியது யார்...?
திமுக அரசும் பாஜகவுக்கு பயந்து அடங்கிய ஆட்சி தான் என்பதை இந்த ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் உறுதிபடுத்துகிறது.
2 G வழக்கை பாஜக காட்டி அச்சுறுத்தி வருவது ஒன்றும் மக்களுக்கு தெரியாமல் இல்லை.
அடிமைதிமுகவையும்,திமுகவையும் பாஜகவின் அரசு துறைகள் இயக்கி கட்டுப்படுத்துவது தெளிவாக தெரிகிறது.
மொத்தத்தில் மாணவியின் மர்ம மரணத்தை தற்கொலை என்று மூடி மறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
இது இன்று நீங்கள் படித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு இது கடந்துபோகக்கூடிய செய்தி மட்டுமே ! உங்களுக்கு நடக்காத வரையில் !
4 Comments
இந்த மரணத்தை நிருபித்து தண்டனை வாங்கி தர வேறு வழி ஏதும் உண்டா... இதன் மீது இந்தியா அல்லாது வேறு எங்கும் வழக்கு தொடர முடியுமா.... முடியுமெனில் வழி செய்யுங்கள் ....
ReplyDeleteஅப்படி செய்ய முடியாது என்பதால்தான் அதிகார வர்க்கம் இந்த ஆட்டம் ஆடுகிறது !
Deleteஇதற்கு நீதி வாங்க முடியாத நிலையில், நம்மால் எப்படி உலக அரசை எதிர்த்து எப்படி வாழ முடியும்....நீங்க சொல்றன்னு சொன்ன கட்டமைப்பு எப்படி சாத்தியம்....கண்டிப்பாக பதில் எதிர்பார்க்கிறேன்...
Deleteஅரசாங்கமும் நீதிமன்றங்களும் மக்களுக்கானது என்று இன்னமும் நம்புகிறீர்களா?
ReplyDelete