உலக வரைபடம் எனும் மாயை !
உலக வரைபடத்தை பெரும்பாலும்
மனிதர்கள்
பார்த்திருப்பீர்கள் !
அந்த காட்சிப்படுத்தலின் மாயை-ஐ பற்றி
என்றாவது
சிந்தித்ததுண்டா !? அப்படி சிந்தித்தில்லை என்றால் இதோ நீங்கள் சிந்திப்பதற்கான
பதிவுதான் இது ! சரி விஷயத்திற்கு வருவோம் ! பொதுவாக பெரும்பாலும் உலகை
மேற்கு(வடக்கு)- கிழக்கு(தெற்கு)
நாடுகளை இனம் காண்பது வழக்கம் !
ஒரு சிறு
மாறுதலுக்காக தெற்கு - வடக்காக உங்கள் பார்வைகளை மாற்றி பாருங்கள் ! புரியவில்லையா
!?
புரிந்து கொள்ள கீழே உள்ள படத்தை பாருங்கள் !
1569 ல் மெர்காடெர் (Mercator 1512-1594) என்பவர் இவ்வாறு ஆதிக்க வெறியை நிலைநாட்ட ஒரு நில வரைபடத்தை வரைந்தார். மேற்கத்திய நாடுகளை பெரிய அளவீடுகளுடனும் தெற்கத்திய நாடுகளின் பரப்பளவை குறுக்கியும் ஒரு வரைபடத்தை உருவாக்கினார்.
| Mercator 1512-1594 காட்சிப்படுத்தல் மூலம் உங்கள் மூளையை எளிதாக ஒரு மாயை இருப்பதாக நம்பவைக்க முடியும் ! அப்படியான யுக்தியை தான் அன்றைய வல்லாதிக்க நாடுகளுக்கு மெர்காடெர் பரிசளித்தார்! மெர்காடெர்உருவாக்கிய நிலப்படம் எந்த அளவிற்கு உதவியது என்றால் மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்தை பிற நாடுகள் மீது நிறுவ, பிற உலக நாடுகளிடம் அவர்களது நாடுகள் சிறிய நாடுகள் தான் என்ற அடிமைத்தன தாழ்வுக்கண்னோட்டத்தை உருவாக்க, மேற்கத்திய நாடுகளிடம் மன ரீதியாக பிறநாடுகள் அடிமைப்பட்டுக்கிடக்க, உதவி இருக்கிறது ! எப்படி என்று சிந்திக்கிறீர்களா !? 1. நாம் வாழும் இந்த பூமியின் வரைபடத்தில் நடுவில் இருக்கவேண்டிய நிலநடுக்கோடு நடுவில் இருக்கிறதா என்றால் மெர்கடெர் வரைபடத்தில் நடுவில் இல்லை. அதாவது நடுவில் உள்ள மற்றும் நிலநடுக்கோட்டிற்கு கீழே உள்ள மூன்றாம் உலக நாடுகளின் பகுதிகள் குறுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கோட்டுக்கு மேல உள்ள மேற்கத்திய நாடுகளின் பரப்பு விரிக்கப்பட்டுள்ளது. 2.ஒட்டுமொத்த வடக்கத்திய உலக நாடுகளின் பரப்பளவு 49.03 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் தான். ஆனால் தெற்கத்திய ஏழை நாடுகளின் பரப்பளவு 100.26 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். எளிமையாக புரிந்து கொள்ள இந்தியாவையும் நோர்வே, சுவீடன், பின்லாந்து உள்ளடக்கிய ஸ்கண்டிநேவிய நாடுகளையும் ஒப்பீட்டோமேன்றால் ஸ்கண்டிநேவிய நாடுகளின் பரப்பளவு 1.1 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆனால் இந்தியாவின் பரப்பளவு 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். அதேபோல் ஐரோப்பாவையும் தென் அமெரிக்காவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் ஐரோப்பாவின் பரப்பளவு 9.7 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் தான். தென் அமெரிக்காவோ 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். இதை விடக்கொடுமை ஆப்ரிக்கா என்றாலே எதோ ஒரு சிறிய நாடு அல்லது சிறு நாடுகளைக்கொண்ட ஒரு பரிதாபக்கண்டம் என்ற வகையில்தான் ஒரு கண்ணோட்டம் தரப்படுகிறது, அல்லது உருவாக்கப்படுகிறது. உண்மையில் அந்த ஒரு கண்டத்திற்குள் எத்தனை நாடுகளை உள்ளடக்கலாம் என்றால் மிகவும் வியப்பைத் தரக்கூடியது. ஆப்ரிக்க நிலப்படமும் அதனுள் உள்ளடக்கப் படக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையும், நிலப்படங்களையும் இந்தப்படம் தெளிவாக்கும்! ஆப்ரிக்கா கண்டத்தின் பரப்பளவு 11.6 மில்லியன் சதுர மைல்கள் கொண்டது, அல்லது 3 கோடி சதுர கிலோமீட்டர் ( 3,02,20,000 km²) ஆனால் உலகவரைபடத்தில் மற்ற நாடுகளின் அளவை காட்சிப்படுத்துவதிலும் ஆப்பிரிக்காவை காட்சிப்படுத்துவதிலும் எவ்வளவு வித்தியாசம் ! ரஷ்ய நாட்டின் பரப்பளவு 8.7 மில்லியன் சதுர மைல்கள் மட்டுமே, அல்லது 1 கோடி சதுர கிலோமீட்டர் (1,71,00,000km²) ஆனால் வரைபடத்தில் நீங்கள் ஆதிக்க வெறியின் வேறுபாட்டை காணலாம் ! 21 இலட்சம் சதுர கிலோமீட்டர் (21,31,000 km²) ஆப்பிரிக்கா கண்டத்தின் பரப்பளவு 3 கோடி 2 இலட்சம் சதுர கிலோமீட்டர் ( 3,02,20,000 km²)] கிரீன்லாந்து நாட்டின் உண்மையான பரப்பளவோடு ஆப்பிரிக்கா மீது வைத்தால் அதன் அளவை கீழே உள்ள வரைபடத்தில் பாருங்கள் ! மேற்கத்தியம் சொல்வது போலவே கிரீன்லாந்து நாட்டின் பொய்யான பரப்பளவை அப்படியே ஆப்பிரிக்கா மீது வைத்தால் ஆப்பிரிக்காவை நில வரைபடத்தில் மட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் கொள்ளை அடிக்கிறது மேற்கத்திய உலகம். ஐரோப்பாவையும் தென் அமெரிக்காவையும் ஒப்பிட்டுப்பார்த்தால் ஐரோப்பாவின் பரப்பளவு 9.7 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் தான். தென் அமெரிக்காவோ 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள். ஆனால் வரைபடத்தின் காட்சிப்படுத்தும் பாருங்கள்! அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் அலாஸ்காவும் ஒன்று. இந்த அலாஸ்காவையும் மெக்சிகோ நாட்டையும் வரைபடத்தில் பார்த்தால் அலாஸ்கா மிகப்பெரியதாய் தோன்றும். உண்மையில் அலாஸ்கா 0.6 மில்லியன் சதுர மைல்கள்தான். ஆனால் மெக்சிகோ 0.7 மில்லியன் சதுர மைல்கள். படத்தை பாருங்கள் வேறுபாட்டை உணர்வீர்கள்! கிரீன்லாந்து நாட்டையும், சீனாவையும் ஒப்புமைப்படுத்திப்பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் ஊதா நிற கிரீன்லாந்து, பச்சை நிற சீனாவைவிட மிகப்பெரிதாகத் தோன்றும். கிரீன்லாந்தின் பரப்பளவு 0.8 மில்லியன் சதுர மைல்கள்தான். சீனாவோ 3.7 மில்லியன் சதுர மைல்கள் பரப்பு கொண்டது. உண்மையில் நீங்கள் வரைபடத்தை பார்க்க வேண்டும் என்றால் இரண்டு வரைபடமும் ஒருங்கிணைந்த இந்த வரைபடத்தை பாருங்கள் தெற்கிலிருந்து உண்மையான அளவில் இன்னும் தெளிவாக காண தொடர்ந்து யாம் தெற்கிலிருந்து வலியுறுத்த காரணம் என்ன தெரியுமா !? உறைபனி சூழ்ந்த இந்த அண்டார்டிகா கண்டத்தை பற்றி சிந்தித்தததுண்டா !? அங்கு உறைந்த நிலையில் இருப்பது உறைபனி மட்டுமல்ல உண்மையும் தான் ! உலகின் உயிர்களின் தொடக்கமும் உங்களை இங்கு விட்டு சென்ற உங்கள் முன்னோர்களின் தொடக்கமும் இங்கிருந்துதான் ! உண்மைகளை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது என்பது நிதர்சனம் நிச்சயம் அந்த நாளில் மனிதர்கள் தெரிந்து கொள்வார்கள் ! நன்றிகள் பல ! |
2 Comments
Keep up your good work
ReplyDeletebest separate website develop panrathu tha.... yarvathu report panna kuda blogspot close aairum....elunthu lam waste aairum..
ReplyDelete