சன் கிராஸ்
சூரிய சிலுவை வெண்கல யுகத்திற்கு முந்தையது ! இது மிகவும் பழமையான சின்னமாகும். இதன் உட்புறத்தில் சிலுவையையும் வெளிப்புறத்தில் ஒரு வட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த முழு சின்னம் முதன் முதலில் சக்கரம் என்ற கண்டுபிடிப்பை அளித்த அந்த சமுதாய மக்களை குறிக்கவும் அவர்கள் சக்கரத்தினால் கொண்டு வந்த சக்தியையும் குறிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர், வட்டம் சூரியனைக் குறிக்கிறது . சூரியன் மிக உயர்ந்த சக்தியின் அடையாளமாகக் கருதப்பட்டதால் இது பண்டைய மன்னர்களின் சக்தியின் சின்னமாகும் கருதப்பட்டது !
| சன் க்ராஸ்-SUN CROSS இந்த சின்னம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இது முதலில் குகைச் சுவர்களில் கண்டுபிடிக்கப்பட்டது! ரசவாதிகள் இதை பூமியுடன் தொடர்புடைய செப்பு உலோகக் கலவைகளுக்கான அடையாளமாகப் பயன்படுத்தினர்.சில ஜோதிட வல்லுநர்களும் பூமியைக் குறிக்க இந்த சின்னத்தைப் பயன்படுத்துகின்றனர். கிறித்துவர்கள் இதை மனிதர்களை விட சக்திவாய்ந்த புனிதர்கள் மற்றும் தேவதூதர்களைக் குறிக்கிறது என்று கருதுகின்றனர் ! இது நோர்டிக் தேவாலயங்களில் காணப்படுகிறது ! இது பூர்வீக அமெரிக்கர்களால் அமெரிக்காவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது !நார்ஸ் கடவுள்களின் தந்தையாக இருந்த மிகவும் சக்திவாய்ந்த நார்ஸ் கடவுளான ஒடினைக் குறிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.இது வானிலை ஆய்வாளர்களால் மோசமான தெரிவுநிலையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. |
0 Comments