CLIMATE WAR - வானிலை எனும் பேராயுதம் !
நிலத்தடி நீர் குறைந்து அதன் நிறமும் மாறி இருக்கும். அதனால் நீரின் விலை பெட்ரோலை விட அதிகமாக விற்கும் .
கடல் நீரையோ நிலத்தடி நீரையோ சுத்திகரித்து தான் குடிக்க வேண்டிய நிலையில் மனிதர்கள் இருப்பார்கள். மழை பொய்த்து போனது மட்டுமல்ல, ஆறுகள் என்ற ஒன்று இல்லாமல் காணாமல் போய் அங்கெல்லாம் ராட்சச குழாய்கள் பதித்து அதன் மூலம் அரசாங்கம் நீரை வினியோகிக்கும்.
உணவு உற்பத்திக்காக நீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் மனிதர்கள் இருப்பார்கள் !
இது போன்ற ஒரு காலகட்டத்தில், மனிதர்களின் அடுத்த வாழ்க்கை சுழற்சி அமைந்திருக்கும் ! மனிதர்கள் உணவுக்கும் ,நீருக்கும் பெரும் முதலாளிகளையும் அரசாங்கத்தையும் நம்பி எதிர்குரல் எழுப்பாத பாவப்பூச்சிகளாக ,சங்கிலிகள் பூட்டப்படாத அடிமைகளாக மனிதர்கள் இப்பூமி முழுதும் அண்டிக்கிடப்பர் !
அப்போது அரச குடும்பங்களின் கையில்தான் வானிலையை கட்டுப்படுத்தும் யுக்தி இருக்கும் ! வானிலையை மாற்றியமைக்கவும், கட்டுப்படுத்தவும் முடிகிற பட்சத்தில்தான் இந்த உலகையே ஆள முடியும் . அவர்களால் வளிமண்டலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ, கடல் பகுதியின் ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியையோ சூடாக்கவோ, குளிர்மைபடுத்தவோ முடியும். அதனால் என்ன பாதிப்பு எந்த நாட்டுக்கு வரும் என்பதையும் துல்லியமாய் தெரிந்து வைத்திருக்கவும் முடியும் !
அப்போது அரச குடும்பங்கள் உலக நாடுகளை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடும். ஏனைய நாடுகள் அனைத்தும் அதன் அடிமை நாடாக மாறி கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை வரும். நான்காம் உலகப்போருக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படாது. அது கண்ணுக்கு தெரியாத போராகத்தான் இருக்கும். அழிவுக்கான போராக இல்லாமல் அடிமைபடுத்துவதற்க்கான போராகத்தான் இருக்கும். அந்த போருக்கான அடித்தளம் எப்போதோ விதைக்கப்பட்டுவிட்டது ! அறிவியல் உத்திகள், மருந்துகள், கண்டுபிடிப்புகள், காப்புரிமை என இன்றும் கூட அமெரிக்கா போன்ற நாடு முதல் அனைத்து நாடுகளிலும்
கண்ணுக்கு தெரியாத அரசகுடும்பம்தான் உலகெங்கும் வியாபித்து இருக்கிறது. தென் இந்தியர்களின் உழைப்பு மட்டும் தான் அவர்களுக்கு இப்போதைய தேவையாக இருக்கிறது. அதுவும் ஆட்டோமேஷன், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், ரொபோட்டிக்ஸ் போன்ற தொழில் நுட்பங்கள் மூலம் வரும் காலத்தில் மனித உழைப்பு கிட்டத்தட்ட 5% மட்டுமே தேவைப்படும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அந்த கால கட்டத்தில் காரை ஓட்டுவது ஒரு செயற்கை நுண்ணறிவாக தான் இருக்கும். கார் டிரைவர்களின் தேவை இருக்காது.
வியாபார உத்திகளின் மூலம் இந்த உலகையே ஒரு காலத்தில் அரச குடும்பங்கள் ஆண்டன. நாளைய உலகை ஆளப்போவதும் உலக வானிலையை கட்டுப்படுத்தும் யுக்தி தெரிந்த அரசகுடும்பங்கள்தான். இதனால் தான் பல நாடுகளில் இந்த அரசகுடும்பங்கள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. இது எந்தளவுக்கு சாத்தியம் யாரெல்லாம் இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன என்பதை பற்றி தான் இந்த கட்டுரை தொகுப்பில் எழுத இருக்கிறேன். இந்த வானிலை போரில் இதுவரை நடந்தது என்ன. இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை பற்றியும் எழுதுகிறேன்.
0 Comments