மனிதர்களுக்கு வணக்கம். யாம் இணையதள போராளிகள் ! யாம் இதுநாள் வரை யாருடனும் நேரடியாக பேசியதில்லை. ஆனால் மறைமுகமாக இருளின் ஆற்றலின் மூலம் அண்ட சராசரம் அனைத்துடனும் எப்பொழுதும் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம் ! அப்படியாகத்தான் மனிதர்களாகிய உங்களிடமும் யாம் உரையாடி வருகிறோம் ! யாம் என்றுமே, எதற்குமே காரணமாக இருப்பதில்லை. மாற்றாக அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறோம் !
சரி விஷயத்துக்கு வருகிறோம் ! யாம் ஏன் உங்களுடன் உங்களுடைய மொழியில் பேச வேண்டும்? மனிதர்களாகிய நீங்கள் அனைத்தையும் உங்களுடைய கண்ணோட்டத்திலேயே பார்ப்பதனால் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கிறீர்கள். ஆனால், எம்முடைய பார்வையில் உங்கள் உலகில் நடக்கும் எல்லா காரியங்களும் ஒரே முறையில் (Pattern) தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, எம்முடைய கண்ணோட்டத்தில், உங்கள் உலகில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை யாம் தொடர்ச்சியாக உங்களுக்கு கூறப்போகிறோம். யாம் உங்களுடைய மொழியில் பேசுவதால் உங்கள் மனதிற்குள் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க முடியும் என்று யாம் நம்புகிறோம் !
உயிர் எனும் ஆற்றல் -யாம் !
எம்மை எப்போதும் உயிர் எனும் ஆற்றலாக-வே பிரகடனப்படுத்திக் கொள்வோம்! அந்த ஆற்றலின் பரிமாண மற்றும் பரிணாம வளர்ச்சியில் ஒன்றே யாம் ! யாம் எனும் இந்த ஆற்றல் ஆனது எப்போது உருவானது எப்போது என்று உங்கள் காலக் கணக்கில் சரியாக கூற முடியாது. ஆனாலும் உங்கள் விஞ்ஞானிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் எம்முடைய உருவாக்கத்தை பற்றி தோராயமாக ஒரு கணக்கை கூறிவருகின்றனர். முதன் முதலாக நடந்த மாபெரும் பேராற்றலின் உட்கூறு ஆற்றல் மோதலின் வெடிப்பில் (Bigbang) யாம் உருவானோம் பண்டைய மதங்களில் இந்த பெரும் வெடிப்பை இரணிய கர்ப்பம் என்றும் சில மதங்களில் இதனை எளிமையான முறையில் பிரித்தும் கூறியுள்ளனர். ஆனால் ஆற்றலாகிய யாம் என்றுமே இருந்துள்ளோம் என்பதே உண்மையாகும். பெருவெடிப்பு எனும் நிகழ்வு நடந்து முடிந்த பின் அந்த ஆற்றலின் மற்றொரு பரிணாமத்தின் ஒரு அங்கமாக காலம் உருவாயிற்று பின்பு அந்த ஆற்றல் பல்வேறு வடிவங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து பல்வேறு ஜடப் பொருட்களும் உயிர்களும் உருவானது ! அந்த ஆற்றலாக இருந்து யாம் இனி அனைத்தையும் இந்த தொடரின் மூலம் மனிதர்களுக்கு விளக்க முயற்ச்சிக்கிறோம் !
ஒளியும் ஒலியும்
இந்த அண்டத்தில் பெரு வெடிப்புக்கு பின்பு அனைத்துப் பொருட்களுமே ஒலி மற்றும் ஒளியின் சேர்க்கையினால் உருவானதே ஆகும். இப்படிப்பட்ட ஒளியும் ஒலியும் சில சமயங்களில் அலைகள் ஆகவும் சில சமயங்களில் பொருட்களாகவும் தெரிகின்றன. இப்படிப்பட்ட பல்வேறு அலைகளையும் பொருட்களையும் பற்றித்தான் எமது கண்ணோட்டத்தில் யாம் உங்களுக்கு தொடர்ந்து கூறப்போகிறோம். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மொழி என்பது ஒலி வடிவம் ஆகும். இந்த மொழியானது உங்கள் உலக சரித்திரத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. உங்கள் உலகின் தொடக்கம் முதல் மொழியின் பயணம் குறித்து யாம் ஒரு வழிப்போக்கனாக உங்கள் அனைவரையும் அந்த வழித்தடத்தை நோக்கி பயணப்படுத்த இருக்கிறோம் அடுத்தடுத்த பதிவில் உங்களது அந்த பயணம் இனி எம்மோடு தொடரும் !
3 Comments
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்...
ReplyDeleteஉண்மையான உலகை காண தயாராக இருக்கிறேன்
ReplyDeleteஅருமை
ReplyDelete